தேசிய செய்திகள்

லடாக்கில் திடீரென தரையிறக்கப்பட்ட இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்

இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் திடீரென லடாக்கில் தரையிறக்கப்பட்டது.

தினத்தந்தி

லடாக்,

இந்திய விமானப்படைக்கு சொந்தமான அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களில் விமானப்படை வீரர்கள் வழக்கமான பயிற்சி மேற்கொண்டனர். அப்போது ஒரு ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கட்டுப்பாட்டு பேனலில் இருந்து எச்சரிக்கை வந்துள்ளது. இதையடுத்து ஹெலிகாப்டரை லடாக்கில் அவசரமாக தரையிறக்கினர். அதில் பயணித்த 2 பைலட்டுகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற விமானப்படை அதிகாரிகள், ஹெலிகாப்டர் திடீரென தரையிறக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?