தேசிய செய்திகள்

காங். மேலிடம் முடிவு செய்தால் கர்நாடக முதல்-மந்திரியாக தொடர்வேன்; சித்தராமையா

2023ம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தது.

தினத்தந்தி

பெங்களூரு,

2023ம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தது. அம்மாநில முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே இழுபறி நிலவியது. இதையடுத்து, முதல்-மந்திரி பதவியை ஆட்சிகாலத்தில் இருவரும் தலா இரண்டரை ஆண்டுகள் கால இடைவெளியில் பகிர்ந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்-மந்திரியாக சித்தராமையா பதவியேற்றார்.

இதனிடையே, கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா பதவியேற்று கடந்த 20ம் தேதி இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையடுத்து, ஏற்கனவே முடிவு செய்யப்பட்டபடி மாநில முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல்-மந்திரி பதவியை யார் வகிப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, டி.கே.சிவக்குமாரின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 15க்கும் மேற்பட்டோர் டெல்லி சென்றுள்ளனர். அவர்கள் காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்து டி.கே.சிவக்குமாருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா இன்று சிக்கபள்ளாப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா கூறுகையில், முதல்-மந்திரி பதவி தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். நான் முதல்-மந்திரியாக தொடரவேண்டுமென காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தால் அதன்படி முதல்-மந்திரியாக தொடர்வேன். அதேவேளை, காங்கிரஸ் மேலிடம் என்ன முடிவு செய்கிறதோ அதை நான் ஏற்றுக்கொள்வேன். டி.கே.சிவக்குமாரும் காங்கிரஸ் மேலிட முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

என்றார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து