லக்னோ,
அயோத்தியில் மத்திய அரசு ஒதுக்கும் 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது பற்றி சன்னி வக்பு வாரியம் இன்னும் முடிவு செய்யவில்லை.
இந்நிலையில், இவ்வழக்கின் மனுதாரர்களில் ஒருதரப்பான ஷியா வக்பு வாரியத்தின் தலைவர் வசீம் ரிஸ்வி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
அயோத்தி வழக்கு தீர்ப்பை முஸ்லிம்கள் ஏற்க வேண்டும். சீராய்வு மனு தாக்கல் செய்வது, சுமுக சூழ்நிலையை கெடுத்து விடும். மசூதி கட்ட மத்திய அரசு ஒதுக்கும் 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம் ஏற்க மறுத்து விட்டால், அதை எங்களுக்கு தர வேண்டும். இதற்காக நாங்கள் கோர்ட்டை அணுக மாட்டோம். மத்திய அரசிடம்தான் கேட்போம். அந்த இடத்தில் மசூதிக்கு பதிலாக, அனைத்து மதத்தினரும் பலனடையும் வகையில் ஆஸ்பத்திரி கட்டுவோம். இவ்வாறு அவர் கூறினார்.