தேசிய செய்திகள்

ஆதார் எண் மட்டும் அளித்தால் ‘பான்’ எண் ஒதுக்கப்படும் - புதிய நடைமுறை அமலுக்கு வந்தது

வருமான வரி கணக்கு தாக்கலின்போது, ஆதார் எண் மட்டும் அளித்தால் ‘பான்’ எண் ஒதுக்கப்படும் என்ற புதிய நடைமுறை அமலுக்கு வந்தது.

தினத்தந்தி

புதுடெல்லி,

வருமான வரித்துறை வழங்கும் நிரந்தர கணக்கு எண் (பான்) பெறாதவர்கள், ஆதார் எண்ணை குறிப்பிட்டு, வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கடந்த பட்ஜெட்டில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

அதன்படி, பான் எண் இல்லாதவர்கள், ஆதார் எண்ணை மட்டும் குறிப்பிட்டு, வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

அத்தகைய நபர்கள், பான் எண்ணுக்கு தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை என்றும், அவர்களுக்கு பான் எண்ணை வருமான வரித்துறை தானாகவே உருவாக்கி தரும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை, நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்துள்ளது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு