அப்போது, பெகாசஸ் உளவு விவகாரம், வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
அதை சுட்டிக்காட்டி நரேந்திர சிங் தோமர் கூறியதாவது:-
விவசாயிகள் தொடர்பான 15 கேள்விகள் இருக்கின்றன. விவசாயிகள் மீது எதிர்க்கட்சிகளுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், சபையை செயல்பட விடவேண்டும். அரசு என்ன சொல்கிறது என்று கவனிக்க வேண்டும். அமளிகளால் சபையின் கண்ணியம் குறைகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.