தேசிய செய்திகள்

நாடாளுமன்றத்தை பிரதமர் திறக்க எதிர்ப்பு: நாடு முழுவதும் ஆதிவாசிகள் இன்று போராட்டம்

நாடாளுமன்றத்தை பிரதமர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஆதிவாசிகள் இன்று போராட்டம் நடத்துகின்றனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிக்கு பதிலாக, பிரதமர் மோடி திறப்பதற்கு அகில இந்திய ஆதிவாசி காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக அதன் தலைவர் சிவாஜிராவ் மோகே கூறுகையில், 'புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறப்பதாக எடுக்கப்பட்டுள்ள சர்வாதிகார முடிவு ஆதிவாசிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது நாட்டின் முதல் பெண்மணியான ஆதிவாசி ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஓரங்கட்டும் செயல் ஆகும். இது இந்திய ஜனநாயகத்துக்கும், ஒட்டுமொத்த ஆதிவாசி சமூகத்துக்கும் நேரடி அவமதிப்பாகும்' என குற்றம் சாட்டினார்.

மோடி அரசு இவ்வாறு தொடர்ந்து அரசியல்சாசனத்தை மீறிவருவதை கண்டித்து 26-ந்தேதி (இன்று) நாடு முழுவதும் மாநிலம், மாவட்டம், வட்டார அளவில் ஆதிவாசிகள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் சிவாஜிராவ் மோகே தெரிவித்தார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்