பாலச்சூர்,
முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி-1 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்திய ராணுவ ஆராய்ச்சி மையம் இன்று காலை 8.30 மணியளவில் இந்த சோதனயை மேற்கொண்டது. ஒடிசா மாநிலம் பாலச்சூர் மாவட்டம் அப்துல் கலாம் தீவில் உள்ள கடற்கரை பகுதியில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. நகர்திறன் கொண்ட (மொபைல்) ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த அக்னி- 1 ஏவுகணை 700 கி.மீட்டர் தொலைவில் இருந்து இலக்கை துல்லியமாக தாக்கியது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த அக்னி -1 ஏவுகணை சுமார் 12 டன்கள் எடை கொண்டதாகும். 1 டன் எடை கொண்ட அணு ஆயுத பொருட்களை சுமந்து சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கும் வல்லமை கொண்டதாகவும் இந்த அக்னி -1 ஏவுகணை. 1 டன் எடையை சுமந்து செல்லக்கூடிய இந்த ஏவுகணை, எடையை குறைப்பதன் மூலம் தாக்குதல் இலக்கை அதிகரிக்கக் கூடிய தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிக திறன் கொண்ட அக்னி-1 ஏவுகணை சேதனை வெற்றிகரமாக நடந்துள்ளதாக இந்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. அக்னி-1 ஏவுகணை சோதனை வழக்கமான பயிற்சிக்காக மேற்கொள்ளப்பட்ட சோதனைதான் என்று இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.