தேசிய செய்திகள்

கொல்கத்தா அருகே சட்டவிரோத துப்பாக்கி தொழிற்சாலை கண்டுபிடிப்பு - ஆயுதங்களுடன் 3 பேர் கைது

கொல்கத்தா அருகே சட்டவிரோத துப்பாக்கி தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஆயுதங்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா அருகே ஹவுரா மாவட்டம் பில்கானா என்ற இடத்தில் சட்டவிரோத துப்பாக்கி தொழிற்சாலை இயங்கி வந்ததை கொல்கத்தா சிறப்பு அதிரடிப்படை போலீசார் நேற்று கண்டுபிடித்தனர். லேத் (கடைசல்) எந்திர பட்டறை என்ற போர்வையில், அந்த ஆலையை நடத்தி வந்த முகமது சலீம், சுல்தான், தவுலத் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் பீகார் மாநிலம் முங்கரை சேர்ந்தவர்கள். அரைகுறையாக உருவாக்கப்பட்ட 26 கைத்துப்பாக்கிகள், எந்திரங்கள், உபகரணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்