படம்: ANI 
தேசிய செய்திகள்

மீன்வளத்துறைக்கென்று தனியாக அமைச்சகம் இருப்பது கூட தெரியாமல் ராகுல் காந்தி இருக்கிறார் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

மீன்வளத்துறைக்கென்று தனியாக அமைச்சகம் இருப்பது கூட தெரியாமல் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசுவதாக அந்த துறையின் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி

மீன்வளத்துறைக்கென்று தனியாக அமைச்சகம் இருப்பது கூட தெரியாமல் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசுவதாக அந்த துறையின் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் மீனவர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி, மத்தியில் நில விவசாயிகளுக்கு அமைச்சகம் இருக்கும்போது, கடல் விவசாயிகளுக்கு ஏன் அவ்வாறு இல்லை? மீனவர்களின் குறைகளை தீர்ப்பதற்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும் என கூறினார்.

இதற்கு பதிலளித்த கிரிராஜ் சிங், 2019ஆம் ஆண்டிலேயே மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்திற்கென்று தனியாக அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டு, அதற்கு தாம் அமைச்சராக இருந்து வருவதாக கூறியுள்ளார்.