புதுச்சேரியில் துணை நிலை ஆளுநராக உள்ள கிரண்பேடி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். இதற்கு முதல் மந்திரி நாராயணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து உள்ள கிரண்பேடி, புதுச்சேரியில் மேற்கொண்டு வரும் ஆய்வை நிறுத்த போவதில்லை என்றும் தனியாக சென்று மீண்டும் ஆய்வு நடத்த போகிறேன் என்றும் கூறியுள்ளார்.
சட்டம் மற்றும் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு பற்றி ஆய்வு நடத்தினால் தான் உண்மை தெரியும் என்றும் கூறியுள்ளார்.
ஆய்வின்பொழுது அசம்பாவிதம் நடந்தால் அரசு பொறுப்பேற்காது என நாராயணசாமி கூறியிருந்த நிலையில், போலீசார் உள்ளிட்ட அனைவரிடமும் தகவல் அனுப்பி விட்டுதான் ஆய்வுக்கு சென்று வருகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.