போபால்,
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியின் சிமன்கஞ்ச் மண்டி காவல் எல்லைக்குட்பட்ட தண்டவன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் துணி காயப்போடும் பெண்ணின் உள்ளாடைகள் மட்டும் திருட்டு போவதாக புகார்கள் எழுந்தனர்.
வெகுநாட்களாக நடந்த இந்த விவகாரம் போலீஸ் நிலையம் வரை சென்றுள்ளது. விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகி உள்ளன.
அப்பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர், தங்கள் வீட்டின் வெளிப்பகுதியில் உலர்த்தப்படும் காதலியின் உள்ளாடைகள் மட்டும் மர்மமான முறையில் அடிக்கடி காணாமல் போவதைக் கவனித்தனர்.
சிசிடிவி காட்சிகளில், நள்ளிரவில் ஒரு இளைஞர் அந்த வீட்டிற்கு அருகில் வருவதும், அங்கும் இங்கும் பார்த்துவிட்டு யாருமில்லாத நேரத்தில் காதலியின் உள்ளாடைகளை மட்டும் திருடிக்கொண்டு ஓடுவதும் பதிவாகியிருந்தது. இந்த ஆதாரத்தை வைத்து அக்குடும்பத்தினர் சிமன்கஞ்ச் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த அமித் மாளவியா என்ற 25 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். கைதான அமித் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண் தனது பக்கத்து வீட்டு பெண் என்றும், அவர் மீது தனக்குத் தீராத 'ஒருதலைக் காதல் 'இருந்ததாகவும்,மேலும் அந்தப் பெண்ணின் மீதான காதலின் காரணமாகவும் காதலியின் நினைவாக இருக்க அவளின் உள்ளாடைகளையும் எடுத்து சென்றதாக போலீசாரிடம் தெரிவித்தார், அவரது பெயரைத் தனது மார்பிலேயே பச்சை குத்தியிருப்பதாகக் கூறி அதை போலீசாரிடம் காட்டினார். இதனை பார்த்த போலீசார் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நின்றனர்.
அந்தப் பெண்ணின் மீதான வெறித்தனமான ஆசையினால் அவரது உள்ஆடைகளைத் திருடியதாக ஒப்புக்கொண்டார். அந்தப் பெண் திருமணமானவர் என்பவதும் அவருக்கு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து அமித் மீது திருட்டு மற்றும் பெண்களைத் துன்புறுத்துதல்/பின்தொடர்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.