தேசிய செய்திகள்

கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

கேரளாவில் இன்றும் நாளையும் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரளாவில் இன்றும் நாளையும் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் மதியம் 2 மணியிலிருந்து இரவு 10 மணி வரையிலான நேரத்தில் மின்னல் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு இன்றும் கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் 64.5 மி.மீ முதல் 115.5 மி.மீ வரை மழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையோரப் பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை