புதுடெல்லி,
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், ஜம்மு மற்றும் காஷ்மீர், இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், அரியானா, சண்டிகார், டெல்லி மற்றும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் 50 முதல் 70 கி.மீட்டர் வேகத்தில் புழுதி புயல் வீச கூடும் என தெரிவித்துள்ளது.
இதே வானிலை பஞ்சாப், அரியானா, சண்டிகார், டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய பகுதிகளில் நாளை நிலவ கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
டெல்லியில் புழுதி புயலால் இன்று 18 வயது இளைஞர் ஒருவர் பலியானார். 13 பேர் காயமடைந்து உள்ளனர்.
காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு 78 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. அதன்படி, மரங்கள், மின்கம்பங்கள் விழுந்தன என்றும் சுவர் இடிந்து விழுந்துள்ளன என்றும் தகவல் தெரிய வந்துள்ளது. இதேபோன்று 13 கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் உள்பட 14 வாகனங்கள் புழுதி புயலால் சேதமடைந்து உள்ளன என்றும் தெரிய வந்துள்ளது.
கடந்த 13ந்தேதியில் இருந்து இடி மற்றும் மின்னலால் 5 மாநிலங்களில் 80 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் 51 பேர் உத்தர பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.