புதுடெல்லி,
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் பற்றி விளக்குவதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (சனிக்கிழமை) அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், காஷ்மீர் தாக்குதல் குறித்தும், அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்படும் என தெரிகிறது. காலை 11 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக கட்டிடத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.