தேசிய செய்திகள்

பத்ராவதி தாலுகாவில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

பத்ராவதி தாலுகாவில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

தினத்தந்தி

சிவமொக்கா-

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா ஸ்ரீராம் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா. இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தகள் உள்ளனர். இந்தநிலையில் மஞ்சுளா நேற்றுமுன்தினம் தனது குடும்பத்துடன் பத்ராவதியில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.

இதனை அறிந்த மர்மநபர்கள் மஞ்சுளாவின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பணம், நகைகளை திருடி சென்றனர். பின்னர் மஞ்சுளா வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 18 கிராம் தங்க நகைகள், ரூ.8 ஆயிரம் காணவில்லை. அவற்றின் மதிப்பு ரூ. 1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. அதனை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மஞ்சுளா பத்ராவதி புறநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்போல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்