போபால்,
மத்தியபிரதேச மாநிலம் பிண்ட் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார் பகுஜன் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த சஞ்சு சிங் குஷ்வாஹா. இந்த நிலையில், பிண்ட் தொகுதியில் சாலை சீரமைப்பு பணிகள் தரமற்ற முறையில் உள்ளதாக புகார் எழுந்த நிலையில், புதிதாக போடப்பட்ட தார் சாலையை அவர் ஆய்வு செய்தார்.
அப்போது தார் சாலை அடியோடு பெயர்ந்து வந்ததால் சாலை பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்றும் இல்லையென்றால் உயரமான கட்டிடத்தில் தூக்கு மாட்டி தொங்கிவிடுவேன் என்றும் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
சாலை ஒழுங்காக போடப்படாத காரணத்திற்காக தூக்கில் தொங்குவேன் என்று எம்.எல்.ஏ கூறிய இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.