புதுடெல்லி,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் இரவு டெல்லி சென்றார். பிரதமர் மோடியை நேற்று சந்தித்தார். அவரது வருகையை முன்னிட்டு அ.தி.மு.க. எம்.பி.க்கள் 28 பேர் தமிழ்நாடு இல்லத்துக்கு வந்திருந்தனர். அவர்களுடன் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை தமிழ்நாடு இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.
சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் எம்.பி.க்களின் செயல்பாடு பற்றியும், நாடாளுமன்ற தேர்தல் பற்றியும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
கூட்டத்தில், முன்பு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் என்று கூறப்பட்ட டாக்டர் மைத்ரேயன், பி.ஆர்.சுந்தரம், பார்த்திபன் உள்ளிட்ட எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை.