தேசிய செய்திகள்

உப்பள்ளியில் முன்விரோதம் காரணமாக வாலிபர் மீது தாக்குதல்

உப்பள்ளியில் முன்விரோதம் காரணமாக வாலிபர் மீது தாக்குதல் நடத்திய மர்மகும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தினத்தந்தி

உப்பள்ளி-

தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா அமர்கோலா பகுதியை சேர்ந்தவர் மில்ட்ரிவாலே வயது (18). இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் மில்ட்ரிவாலே அப்பகுதியில் உள்ள மதுபான கடைக்கு மது குடிப்பதற்காக சென்றார். அங்கு மதுகுடித்து விட்டு அவர் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த மர்மகும்பல் மில்ட்ரிவாலேவை தாக்கியது. பின்னர் அந்த கும்பல் பீர்பாட்டிலை எடுத்து அவரது தலையில் அடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இதில் படுகாயம் அடைந்த மில்ட்ரிவாலேவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மில்ட்ரிவாலே, ஏ.பி.எம்.சி. போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், முன்விரோதம் காரணமாக வாலிபர் மீது மர்மகும்பல் தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. இதில் தொடர்புடைய மர்மகும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?