தேசிய செய்திகள்

இந்தியாவில் ஒரே நாளில் 12,830 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் ஒரே நாளில் 12,830 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

புதுடெல்லி,

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. இதுவரை உலக அளவில் 24.71 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 15 ஆயிரத்துக்குள் வந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஏறுமுகம் கண்டது. இந்த நிலையில், இன்று இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 830 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 446 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,57,740 லிருந்து 4,58,186 ஆக உயர்ந்துள்ளது.

நாடுமுழுவதும் ஒரு நாளில் 14,667 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,36,41,175 லிருந்து 3,36,55,842 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 98.20% ஆகவும் உயிரிழப்பு விகிதம் 1.34% ஆகவும் உள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,59,272 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 247 நாட்களில் இல்லாத அளவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 106.14 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு