தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,378 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,378 ஆக உயர்வடைந்து உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று மாலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில், இந்த வைரஸ் தொற்றால் இந்தியாவில் 13,835 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1,076 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 452 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கொரோனா பாதிப்பு பற்றி மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 480 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 1,991 பேர் குணமடைந்து உள்ளனர். 11,906 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர் என தெரிவித்து உள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,378 ஆக உயர்வடைந்து உள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு