தேசிய செய்திகள்

தனி மாநிலம் அமைக்கக்கோரி ஜம்முவில், மொட்டை அடித்து போராடிய அரசியல் தலைவர்

தனி மாநிலம் அமைக்கக்கோரி ஜம்முவில், மொட்டை அடித்து அரசியல் தலைவர் ஒருவர் போராட்டம் நடத்தினார்.

தினத்தந்தி

ஜம்மு,

ஜம்மு-காஷ்மீர், லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதை எதிர்த்து ஜம்மு-காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று ஜம்முவில் மொட்டை அடிக்கும் போராட்டம் நடைபெற்றது.

அந்த கட்சியின் தலைவர் பல்வந்த்சிங் மங்கோடியாவும், நிர்வாகிகளும் தங்கள் தலையை மொட்டை அடித்துக்கொண்டனர். காஷ்மீருடன் இணைக்காமல், ஜம்மு பகுதியை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி, தொடர்ந்து போராட்டம் நடத்தப்போவதாக அவர்கள் உறுதி எடுத்துக்கொண்டனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு