தேசிய செய்திகள்

கர்நாடகாவில் ஒரே நாளில் 26,962 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கர்நாடக மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,74,959 ஆக அதிகரித்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநில சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 26,962 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,74,959 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 190 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கர்நாடகாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,075 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 8,697 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் கர்நாடகாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,46,554 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் தற்போது 2,14,311 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.