தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் இதுவரை 30 லட்சம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது - துணை முதல் மந்திரி அஸ்வத் நாராயண் தகவல்

கர்நாடகத்தில் இதுவரை 37 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக துணை முதல் மந்திரி அஸ்வத் நாராண் கூறினார்.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரல் பரவலை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கர்நாடக துணை முதல் மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

கொரோனா 3-வது அலை வந்தாலும் சரி, டெல்டா பிளஸ் வைரஸ் பரவினாலும் சரி, அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டால் அவற்றை நாம் தைரியத்துடன் எதிர்கொள்ள முடியும். யாரும் அலட்சியமாக இருக்கக்கூடாது. கர்நாடகத்தில் இதுவரை 2 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 1.70 கோடி பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது.

30 லட்சம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. கர்நாடகத்தில் மொத்த மக்கள்தொகையில் 37 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. மீதமுள்ள 63 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மத்திய அரசு அதிகளவில் தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. தனியார் நிறுவனங்களும் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கி வருகின்றன.

இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை