தேசிய செய்திகள்

காஷ்மீரில் சட்டவிரோதமாக பாலின பரிசோதனை செய்த 3 பேர் கைது - பஞ்சாப்பை சேர்ந்தவர்கள்

காஷ்மீரில் சட்டவிரோதமாக பாலின பரிசோதனை செய்ததாக பஞ்சாப்பை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

ஜம்மு,

காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டம் ககஜ்வால் என்ற பகுதியில் சிலர் வாடகை வீட்டில் சட்டவிரோதமாக கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்பது போன்ற பாலின பரிசோதனைகள் செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் குறிப்பிட்ட அந்த வீட்டுக்கு அதிரடியாக சென்று சோதனை நடத்தினார்கள்.

அப்போது அந்த வீட்டில் சட்டவிரோதமாக பாலின பரிசோதனைகளை செய்ததாக பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் பகுதியை சேர்ந்த ரஞ்சீத் சிங், ரஜிந்தர் கொர் மற்றும் பரமஜீத் கொர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்கள் பரிசோதனைக் காக வைத்திருந்த அல்ட்ராசவுண்ட் மிஷின் மற்றும் மருத்துவ உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த வீட்டில் இருந்து கூர்மையான ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைதான 3 பேர் மீதும் பிறப்புக்கு முந்தைய பாலின நிர்ணயம் தடை செய்யப்பட்ட மற்றும் ஒழுங்குமுறை சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்