தேசிய செய்திகள்

கேரளாவில் ஆம்புலன்ஸ் - மீன் லாரி மோதல்: 8 பேர் சாவு

கேரளாவில் மீன் லாரி மீது ஆம்புலன்ஸ் ஒன்று மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

பாலக்காடு,

கேரள மாநிலம் பத்தம்பி கிராமத்தை சேர்ந்தவர்கள் சென்ற கார் நல்லியம்பதி அருகே பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை மீட்டு அரசு பஸ் மூலம் நன்மாரா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக பாலக்காடு மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.

பாலக்காடு செல்லும் வழியில் எதிரே வந்த மீன் லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியது. இந்த விபத்தில் ஆம்புலன்சில் இருந்த காயம் அடைந்தவர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் டிரைவர் சுதீர் உள்பட 8 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு