image tweeted by @newstracklive 
தேசிய செய்திகள்

மனிதனைப் போன்ற முகத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி...! ஆச்சரியமாக பார்த்துச்செல்லும் மக்கள்

மத்தியப் பிரதேசத்தில், மனிதனைப் போன்ற முகத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினத்தந்தி

போபால்,

மத்திய பிரதேச மாநிலத்தில் நவாப் கான் என்பவருக்குச் சொந்தமான ஆடு ஒன்று மனிதனின் முக அமைப்பை கொண்ட ஒரு குட்டியை ஈன்றுள்ளது.

இச்சம்பவம் அம்மாநிலத்தில் விதிஷாவில் உள்ள சிரோஞ்ச் தாலுகாவின் செமால் கெடி கிராமத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. ஆடு மனித முகம் கொண்ட குட்டிய ஈன்ற செய்தி கிராமம் முழுவதும் பரவியதையடுத்து அப்பகுதி மக்கள் அவரது வீட்டிற்கு திரண்டனர்.

அந்த ஆட்டுக்குட்டி மனிதனைப் போன்ற முகத்தால் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அது மனிதனைப் போன்ற கண்கள், வாய் மற்றும் மூக்கு ஆகியவற்றைக் கொண்டிருந்தது. கண்களைச் சுற்றி ஒரு மனிதனின் கண்ணாடியைப் போன்ற கருப்பு வளையங்கள் இருந்தன. அதன் தலையில் அடர்த்தியான வெள்ளை ரோமங்கள் மற்றும் அதன் கன்னத்தைச் சுற்றி தாடி போன்ற தோற்றம் இருந்தது.

இந்த ஆட்டுக்குட்டியை சிலர் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்