தேசிய செய்திகள்

மராட்டிய மாநிலத்தில் இன்று 2,791 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்

மராட்டிய மாநிலத்தில் தற்போது 26,805 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

மராட்டிய மாநில சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு புதிதாக 1,638 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மராட்டியத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65,94,820 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 49 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,39,865 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 2,791 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 64,24,547 ஆக அதிகரித்துள்ளது. மராட்டியத்தில் தற்போது 26,805 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மராட்டிய மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை