தேசிய செய்திகள்

மராட்டியத்தில் இன்று 51,457 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்

மராட்டிய மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 49,78,937 ஆக உயர்ந்துள்ளது.

மும்பை,

மராட்டிய மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு இன்று ஒரே நாளில் 34,031 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மராட்டியத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,67,537 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 594 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84,371 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 51,457 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 49,78,937 ஆக அதிகரித்துள்ளது. மராட்டியத்தில் தற்போது 4,01,695 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மராட்டிய மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.