இமாச்சல பிரதேசம்,
கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் கடந்த மாதம் 16-ந்தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் மற்றும் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனங்களின் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் என சுமார் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது. கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கிய இந்த திட்டம் மூலம் தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தில் இதுவரை 12,000 முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநில சுகாதார செயலாளர் அமிதாப் அவஸ்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், மாநிலத்தில் முதற்கட்டத்தில் சுமார் 72,000 சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இரண்டாவது முறையாக 11,000 க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை 12,000 க்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று கூறினார்.