துங்கார்பூர்,
ராஜஸ்தானின் துங்கார்பூர் மாவட்டத்தில் ஆஸ்பூர் கிராமத்தில் மகாசிவராத்திரி திருவிழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அவற்றை சாப்பிட்ட பக்தர்களில் 60, 70 பேருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. ஒரு சிலர் மயங்கி விழுந்தனர். இதனையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதுபற்றி ஆஸ்பூரின் தலைமை மருத்துவ சுகாதார அதிகாரி கூறும்பொழுது, இதுவரை 70 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த எண்ணிக்கை உயர கூடும் என தெரிகிறது. பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து மருத்துவ குழுவினர் வந்து நோயாளிகளின் மாதிரிகளை சேகரித்து கொண்டு சென்றனர். உணவு நஞ்சாக மாறியிருக்க கூடும் என்பது போல் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.