தேசிய செய்திகள்

ஊரடங்கு நடவடிக்கை தொடர்பாக மத்திய அரசு மீது ராகுல் காந்தி மீண்டும் தாக்கு

ஊரடங்கு நடவடிக்கை தொடர்பாக மத்திய அரசு மீது ராகுல் காந்தி மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வருவதால் வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் பலகட்ட ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது.

ஆனால் மத்திய அரசின் இந்த ஊரடங்கு நடவடிக்கையால் எந்த பயனும் இல்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

அந்தவகையில் மீண்டும் அவர் மத்திய அரசை கடுமையாக குறை கூறியுள்ளார்.மத்திய அரசின் 4-ம் கட்ட ஊரடங்கிலும் நோய்த்தொற்று அதிகரித்து இருப்பதாக வரைபடம் ஒன்றை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு உள்ள அவர், பைத்தியம் மீண்டும் மீண்டும் ஒரே செயலை செய்துவிட்டு வெவ்வேறு முடிவுகளை எதிர்பார்க்கிறது என்ற மேற்கோள் ஒன்றையும் அதில் குறிப்பிட்டு உள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு