தேசிய செய்திகள்

ஸ்டெர்லைட் விவகாரத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க தடை விதிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்

ஸ்டெர்லைட் விவகாரத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில்,

இது சட்டம், ஒழுங்கு பிரச்சினையே தவிர, போராட்டத்தின் பின்னணியில் நக்சலைட்டுகள் இல்லை. போராட்டக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது என கூறப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட், ஸ்டெர்லைட் விவகாரத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்