தேசிய செய்திகள்

தமிழகத்தில் ஓமியோபதி மருத்துவக்கல்லூரிகளை அதிகப்படுத்த வேண்டும் - தொல்.திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்

தமிழகத்தில் ஓமியோபதி மருத்துவக்கல்லூரிகளை அதிகப்படுத்த வேண்டும் என மக்களவையில் தொல்.திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மக்களவையில் ஓமியோபதி மத்திய சபை மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு அந்த மசோதாவை ஆதரித்து பேசினார். ஓமியோபதி மத்திய சபை மசோதாவிற்கு தனது ஆதரவை தெரிவித்துக்கொள்வதாகவும், மத்திய அரசின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது என்றும் அவர் கூறினார்.

மேலும் அவர் பேசும்போது, தமிழகத்தில் ஓமியோபதி மருத்துவ கல்லூரிகள் மிகக்குறைவாகவே உள்ளன. ஓமியோபதி மருத்துவ கல்லூரிகளை அதிகப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாற்று மருத்துவத்திற்கு போதுமான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும். பொதுவாக மாற்று மருத்துவத்தை மேம்படுத்த அரசு முயற்சி எடுப்பதில்லை. அதனால் மக்கள் அலோபதி மருத்துவத்தையே நம்பி உள்ளனர்.

ஓமியோபதி மருத்துவம் போன்ற மாற்று மருத்துவ முறைகளை மேம்படுத்த அரசு முன்வர வேண்டும். ஓமியோபதி மருத்துவம் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்