தேசிய செய்திகள்

கருத்தரிப்பு மையத்தில் 47 வாடகை தாய்கள் அடைத்து வைப்பு

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில், குழந்தைப்பேறு சிகிச்சை அளிக்கும் கருத்தரிப்பு மையம் ஒன்று, அனுமதி இன்றி இயங்கி வருவதாகவும், நிறைய முறைகேடுகள் நடப்பதாகவும் புகார் வந்தது.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில், குழந்தைப்பேறு சிகிச்சை அளிக்கும் கருத்தரிப்பு மையம் ஒன்று, அனுமதி இன்றி இயங்கி வருவதாகவும், நிறைய முறைகேடுகள் நடப்பதாகவும் புகார் வந்தது. அதன்பேரில், அங்கு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகளுக்கு வாடகை தாயாக செயல்பட்டு குழந்தை பெற்றுக் கொடுக்கும் பெண்கள் 47 பேர், அங்கு அடைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் மீட்டனர். ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகளிடம், தலா ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம்வரை பெற்றுக்கொண்டு, வாடகை தாய்களுக்கு தலா ரூ.3 லட்சம்வரை அளித்து வந்ததாக கருத்தரிப்பு மையத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.