தேசிய செய்திகள்

2017-18 நிதி ஆண்டில் ரூ.100 கோடி வருமானம் உடையவர்கள் 61 பேர்தான் - மக்களவையில் பொன் ராதாகிருஷ்ணன் தகவல்

2017-18 நிதி ஆண்டில் ரூ.100 கோடி வருமானம் உடையவர்கள் 61 பேர்தான் என மக்களவையில் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் எழுத்து மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதித்துறை ராஜாங்க மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் நேற்று பதில் அளித்தார்.

அதில் அவர், நமது நாட்டில் 2017-18 மதிப்பீட்டு ஆண்டில், ஆண்டு வருமானம் ரூ.100 கோடியும், அதற்கு மேலும் வருமானம் ஈட்டியதாக 61 தனிநபர்கள் மட்டுமே கணக்கு காட்டி உள்ளனர் என கூறி உள்ளார்.

2016-17 நிதி ஆண்டில் இந்த எண்ணிக்கை 38 ஆக இருந்து உள்ளது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு கேள்விக்கு நிதித்துறையின் மற்றொரு ராஜாங்க மந்திரியான சிவபிரதாப் சுக்லா பதில் அளிக்கையில், பினாமி சொத்து சட்டத்தின் கீழ் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் ரூ.6 ஆயிரத்து 900 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து