தேசிய செய்திகள்

மராட்டிய சட்டசபை தேர்தலில் தமிழகத்தை சேர்ந்த கேப்டன் தமிழ்ச்செல்வன் மீண்டும் வெற்றி

மராட்டிய சட்டசபை தேர்தலில் தமிழகத்தை சேர்ந்த கேப்டன் தமிழ்ச்செல்வன் மீண்டும் வெற்றிபெற்றார்.

தினத்தந்தி

மும்பை,

மராட்டிய மாநில சட்டசபை தேர்தலில் மும்பை சயான் கோலிவாடா தொகுதியில் பா.ஜனதா சார்பில் தமிழரான கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தமிழரான கணேஷ்குமார் நிறுத்தப்பட்டார். இதனால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கை முடிவில் கேப்டன் தமிழ்ச்செல்வன் 13,921 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் பெற்ற வாக்குகள் 54,794. காங்கிரஸ் வேட்பாளர் கணேஷ்குமார் 40,873 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

2-வது முறையாக மராட்டிய சட்டசபைக்கு செல்லும் தமிழரான கேப்டன் தமிழ்ச்செல்வன் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா பிலாவிடுதி கிராமத்தை சேர்ந்தவர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்