தேசிய செய்திகள்

மராட்டியத்தில் கொரோனா 2வது அலை கட்டுக்குள் உள்ளது; முதல் மந்திரி அறிவிப்பு

மராட்டியத்தில் கொரோனா 2வது அலை கட்டுக்குள் உள்ளது என முதல் மந்திரி உத்தவ் தாக்கரே அரசு கூறியுள்ளது.

தினத்தந்தி

புனே,

நாட்டில் கொரோனா 2வது அலையில் முதல் அலையை விட பாதிப்புகள் அதிகரித்து காணப்பட்டன. 2வது அலையில் அதிகம் பாதித்த மாநிலங்களில் மராட்டியமும் ஒன்று. இந்தியாவில் மராட்டியம், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் முதல் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், முதல் மந்திரி உத்தவ் தாக்கரே கூறும்போது, பல்வேறு அரசியல் கட்சிகளும் கூட்டம் நடத்துவது பற்றி வருத்தம் தெரிவித்து உள்ளார். அனைத்து கட்சிகளும் கூட்டம் கூடாமல் தவிர்க்கும்படியும், அரசியல் கூட்டங்கள் எதனையும் நடத்த வேண்டாம் என அவர் வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.

மராட்டிய அமைச்சரவை கூட்டத்திற்கு பின் முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்ட செய்தியில், மராட்டியத்தில் கொரோனா 2வது அலை கட்டுக்குள் உள்ளது என தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் ஒத்துழைப்பு மற்றும் சுகாதார துறையின் பல்வேறு நடவடிக்கைகள் ஆகியவற்றால் இது சாத்தியப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்