தேசிய செய்திகள்

மாநிலங்களவையில் 4 புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பு

மாநிலங்களவையில் 4 புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பு இரு அவைகளும் 1-ந்தேதிக்கு ஒத்திவைப்பு.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரை நிகழ்த்தியபின் மாநிலங்களவை தனியாக கூடியது. இதில் ஆம் ஆத்மியை சேர்ந்த 3 பேர் மற்றும் பா.ஜனதாவை சேர்ந்த மத்திய மந்திரி ஹர்தீப் புரி ஆகியோர் புதிய உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

பின்னர் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி 2017-18-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து சபை வருகிற 1-ந்தேதிக்கு (வியாழக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே மக்களவையும் காலையில் கூடியது. முதலில் ஜனாதிபதி உரையின் நகல்கள் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டன. பின்னர் பொருளாதார ஆய்வறிக்கையை அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். தொடர்ந்து, சபையை 1-ந்தேதி காலை 11 மணிக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார்.

மத்திய பட்ஜெட் 1-ந்தேதி தாக்கல் செய்யப்படும் நிலையில், முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் 9-ந்தேதி வரை நடக்கிறது. பின்னர் சில நாட்கள் இடைவெளிக்குப்பின் மார்ச் 5-ந்தேதி முதல் ஏப்ரல் 6-ந்தேதி வரை 2-ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது