பாட்னா,
பீகாரில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகி இருந்த மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதால், தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். எனவே அந்த இடத்துக்கு நடந்த இடைத்தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், லோக் ஜனசக்தி கட்சி தலைவரும், மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரியுமான ராம்விலாஸ் பஸ்வானை பா.ஜனதா களமிறக்கியது. அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கிடையே ஒடிசாவில் இருந்து பிஜூ ஜனதாதளத்தை சேர்ந்த இருவர் போட்டியின்றி தேர்வாகினர். 3-வது வேட்பாளராக பா.ஜனதாவை சேர்ந்த அஸ்வினி வைஷ்ணவ் தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு பிஜூ ஜனதாதளம் ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.