தேசிய செய்திகள்

தெலுங்கானா மாநிலத்தில் மக்களிடம் குறை கேட்க கவர்னர் தமிழிசை முடிவு

தெலுங்கானா மாநிலத்தில் மக்களிடம் குறை கேட்க கவர்னர் தமிழிசை முடிவு செய்துள்ளார்.

தினத்தந்தி

ஐதராபாத்,

தெலுங்கானா மாநில மஜ்லிஸ் பச்சோ தெரீக் கட்சி தலைவர் அம்ஜத் உல்லாகான், கவர்னர் குறைந்தபட்சம் வாரத்தில் ஒரு நாள் பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்க வேண்டும் என்று டுவிட்டர் மூலம் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கு அவர், உங்கள் ஆலோசனைக்கு நன்றி, இந்த திட்டம் ஏற்கனவே எனது பரிசீலனையில் உள்ளது என்று பதில் தெரிவித்தார்.

கவர்னரின் முடிவு அங்குள்ள அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இதனை காங்கிரஸ் வரவேற்றுள்ளது. மாநில காங்கிரஸ் பொருளாளர் நாராயண ரெட்டி கூறும்போது, முதல்-மந்திரி தனது குடும்பத்தினர், சில அதிகாரிகள் மற்றும் மந்திரிகள் தவிர அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள், பொதுமக்கள் என வேறு யாரையும் சந்திப்பதில்லை. கவர்னரின் முடிவு மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்