தேசிய செய்திகள்

1984-ம் ஆண்டு கலவர வழக்கில் ஒருவருக்கு தூக்குத்தண்டனை - டெல்லி கோர்ட்டு தீர்ப்பு

984-ம் ஆண்டு கலவர வழக்கில், ஒருவருக்கு தூக்குத்தண்டனை விதித்து டெல்லி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரதமராக பதவி வகித்து வந்த இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தின்போது 2 பேரை கொன்றதாக யஷ்பால் சிங் என்பவர் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக நரேஷ் ஷெராவத் என்பவர் மீதும் டெல்லி போலீசார் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதி அஜய் பாண்டே முன்பாக நடந்த வந்தது. இந்த வழக்கில் யஷ்பால் சிங், நரேஷ் ஷெராவத் இருவரும் குற்றவாளிகள் என்று கடந்த 14-ந் தேதி நீதிபதி அறிவித்தார். இவர்களுக்கான தண்டனை விவரத்தை நீதிபதி நேற்று அறிவித்தார். அப்போது யஷ்பால் சிங்கிற்கு அவர் தூக்குத் தண்டனை விதித்தும், நரேஷ் ஷெராவத்துக்கு ஆயுள்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

குற்றவாளிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்தினால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் பாதுகாப்பு காரணம் கருதி அவர்கள் அடைக்கப்பட்டுள்ள திகார் சிறைக்கே சென்று நீதிபதி தீர்ப்பை வாசித்தார்.

சீக்கியர் கலவரத்துக்கு எதிராக பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் ஒரு குற்றவாளிக்கு முதல் முறையாக தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்