தேசிய செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் சுமார் 50 லட்சம் பேர் எழுதிய காவல்துறை பணியிடங்களுக்கான தேர்வு ரத்து

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் நடைபெற்ற காவல்துறை தேர்வை ரத்து செய்வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

தினத்தந்தி

லக்னோ,

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் காவல்துறையில் சுமார் 60,000 காலிப்பணியிடங்களை நிரப்ப எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை சுமார் 50 லட்சம் பேர் எழுதினர்.

இந்நிலையில் காவல்துறை பணியிடங்களுக்காக கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் நடைபெற்ற தேர்வை ரத்து செய்வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் கசிந்து சமூகவலைத்தளங்களில் பரவியதாக வெளியான புகாரின் அடிப்படையில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

போலீஸ் ரிசர்வ் சிவில் காவலர் பணியிடங்களுக்கான தேர்விற்காக நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்து, அடுத்த 6 மாதங்களுக்குள் மறுதேர்வு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகளின் புனிதத்தன்மையில் சமரசம் செய்து கொள்ள முடியாது. இளைஞர்களின் கடின உழைப்பில் விளையாடுபவர்களை எந்த சூழ்நிலையிலும் தப்ப மாட்டார்கள். இதுபோன்ற செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து