தேசிய செய்திகள்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு அல்-கொய்தா பயங்கரவாத இயக்கம் மிரட்டல்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு அல்-கொய்தா பயங்கரவாத இயக்கம் மிரட்டல் விடுத்து உள்ளது.

தினத்தந்தி

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவன் அல்-ஜவாஹிரி வெளியிட்டு உள்ள வீடியோவில், காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் அங்குள்ள இந்திய ராணுவம் மற்றும் அரசாங்கம் மீது இடைவிடாத தாக்குதலை நடத்துமாறு அழைப்பு விடுத்துள்ளான்.

காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதில் பாகிஸ்தானின் ஈடுபாட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ள அவன், காஷ்மீரை மறந்து விடாதீர்கள் என்று பாகிஸ்தானை கேட்டுக் கொண்டுள்ளான். ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதை அடுத்து, தலிபான், ஹக்கானி நெட்வோர்க் போன்ற பயங்கரவாத இயக்கங்களின் படையெடுப்பால் அல்-கொய்தா செயல் இழக்க தொடங்கி விட்டது.

இருப்பினும் ஆப்கானிஸ்தானில் அவ்வப்போது பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. இந்திய ராணுவம் எல்லையை தாண்டிய பயங்கரவாதத்தை அழிக்க அவ்வப்போது பாகிஸ்தானுக்குள் சென்று தாக்குதல் நடத்துகிறது. அதனால் பயங்கரவாதிகளை இப்போது ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு சென்று லஷ்கர் மற்றும் ஜெய்ஷ் இயக்கங்கள் பயிற்சி அளித்து வருகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து