தேசிய செய்திகள்

மேற்குவங்காளத்தில் பா.ஜ.க.வின் தேர்தல் பிரசார பாடலுக்கு தடை - தேர்தல் ஆணையம் நடவடிக்கை

மேற்குவங்காளத்தில் பா.ஜ.க.வின் தேர்தல் பிரசார பாடலுக்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி மேற்கு வங்காள மாநிலத்தில் பா.ஜ.க. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அம்மாநில ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசை விமர்சிக்கும் வகையில் பாடல் ஒன்றை பயன்படுத்தி பா.ஜ.க.வினர் பிரசாரம் செய்கின்றனர்.

இனி திரிணாமுல் இருக்காது என தொடங்கும் அந்த பாடலை அமீத் சக்ரவர்த்தியை எழுத, பா.ஜ.க. எம்.பி.யும், பாடகருமான பாபுல் சுப்ரியோ இசையமைத்து பாடி உள்ளார்.

பா.ஜ.க.வினர் தேர்தல் ஆணையத்திடம் முறையாக அனுமதி பெறாமல் இந்த பாடலை பயன்படுத்தி வருவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பா.ஜ.க.வினர் இனி அந்த பாடலை பிரசாரத்துக்கு பயன்படுத்த கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

மேலும் இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி பாபுல் சுப்ரியோவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதற்கிடையில், பா.ஜ.க.வின் பாடலில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரசை தரக்குறைவாக விமர்சித்ததாக பாபுல் சுப்ரியோ மீது போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது