தேசிய செய்திகள்

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா; ராஜஸ்தானில் அரை நாள் விடுமுறை அறிவிப்பு

முன்னதாக மத்திய அரசு அலுவலகங்களுக்கு வரும் 22-ந்தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

ஜெய்ப்பூர்,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 22-ந்தேதி அரை நாள் விடுமுறை விடப்படும் என அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி பஜன்லால் சர்மா அறிவித்துள்ளார். முன்னதாக அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கு வரும் 22-ந்தேதி மதியம் 2.30 மணி வரை விடுமுறை அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்