தேசிய செய்திகள்

வருமான வரி கணக்கு தாக்கலுக்கான காலக்கெடு மார்ச் 15 வரை நீட்டிப்பு

2021-22 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவதற்கான கால அவகாசத்தை மார்ச் 15-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

2021-22 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவதற்கான கால அவகாசத்தை மார்ச் 15-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக நிதி அமைச்சகமும், வருமான வரித்துறையும் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் வரி செலுத்துவோர் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டும், இ-பைலிங் தளத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல் காரணமாகவும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் கால அவகாசம் மார்ச் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது எனக்கூறப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்