தேசிய செய்திகள்

வருமான வரி கணக்கு படிவங்கள் ஜனவரிக்குள் வெளியிடப்படும்: நேரடி வரிகள் வாரியம் தகவல்

வருமான வரி கணக்கு படிவங்கள் ஜனவரிக்குள் வெளியிடப்படும் என்று நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

வருமான வரி தாக்கலை எளிமைப்படுத்தும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டம் அடுத்த நிதியாண்டு முதல் அமலுக்கு வரும் நிலையில் இந்த சட்டத்துக்கான விதிகள் மற்றும் வருமான வரி கணக்கு படிவங்களை அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதத்துக்குள் வெளியிடப்படும் என மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் ரவி அகர்வால் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், புதிய வருமான வரிச்சட்டத்தின் விதிகள் மற்றும் படிவங்களை வடிவமைக்கும் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறோம். ஜனவரி மாதத்துக்குள் இதை வெளியிட திட்டமிட்டு உள்ளோம். அதன் மூலம் வரி செலுத்துவோர் தங்கள் செயல்முறைகளை மாற்றியமைக்க போதுமான நேரம் கிடைக்கும் என்றார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து