புதுடெல்லி,
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் இடம்பெற்றிருந்த உலக வரைபடத்தில் இந்தியா உள்ள பகுதியில் ஜம்மு-காஷ்மீ எல்லைக்கோடு தவறாக இருந்தது.
இந்த டுவிட்டரை மத்திய அமைச்சா ராஜீவ் சந்திரசேகா பதிவிட்ட பதில் பதிவில், இந்தியாவின் தவறான வரைபடம் இதில் இடம்பெற்றுள்ளது. இதை வாட்ஸ்ஆப் சரி செய்ய வேண்டும். இந்தியாவில் வாத்தகத்தை தொடர வேண்டுமென்றால் இந்தியாவின் வரைபடத்தை சரி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து, உடனடியாக அந்த விடியோவை நீக்கிய வாட்ஸ்அப் நிறுவனம், எங்களின் எதிபாராத தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. விடியோ நீக்கப்பட்டுள்ளது. மன்னிக்கவும், வரும் நாள்களில் கவனத்துடன் செயல்படுவோம் என்று பதில் பதிவில் தெரிவித்தது.