தேசிய செய்திகள்

கேரளாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு; மே 23 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல் மந்திரி அறிவிப்பு

கேரளாவில் கொரோனா தொற்று உயர்வால் வரும் 23ந்தேதி வரை முதல் மந்திரி பினராயி விஜயன் ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று கூறும்பொழுது, கேரளாவில் 34,694 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதியாகி உள்ளன. 93 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு 6,243 ஆக அதிகரித்து உள்ளது.

31,319 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். இதனால் இதுவரை மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 16,36,790 ஆக உயர்வடைந்து உள்ளது என கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறும்பொழுது, கேரளாவில் தொற்று விகிதம் தொடர்ந்து அதிக அளவில் உள்ளது. அதனால், கேரளாவில் அமலில் உள்ள முழு ஊரடங்கை வருகிற 23ந்தேதி வரை நீட்டிப்பது என மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா தொற்று விகிதம் அதிகமுள்ள திருவனந்தபுரம், எர்ணாகுளம், திரிச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் மூன்றடுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்