தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு - மந்திரி சுரேஷ்குமார் தகவல்

கர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக கவ்வி மந்திரி சுரேஷ்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் நேற்று தாசரஹள்ளியில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கு நேரில் சென்று, அங்கு மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் கலந்துரையாடல் நடத்தினார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நல்ல தனியார் பள்ளிகளில் தங்களின் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் தீவிர முயற்சி மேற்கொள்வார்கள். ஆனால் நிலைமை தற்போது மாறியுள்ளது. அரசு பள்ளிகளில் இடம் பெற எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகளின் உதவியை பெற்றோர் நாடுகிறார்கள். அரசு பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயாத்தியுள்ளோம்.

கற்பித்தல் நல்ல முறையில் மேற்கொள்ளப்படுகிறது. அதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. மாநிலத்தில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தூர்தர்ஷன் சந்தனா தொலைக்காட்சியில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

இவ்வாறு சுரேஷ்குமார் கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்